• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வாக்களிப்பதில் அலட்சியம் காட்டிய வேட்பாளர்கள்

Byவிஷா

Apr 20, 2024

நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை, தென்காசி தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியிருக்கின்றனர்.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வாக்கு உள்ளது. ஆனால், சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்துவிட்டு, மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து வாக்குப்பதிவு பணிகளை பார்வையிட தாமதம் ஆகும் என்பதால், அவர் நேற்று வாக்களிக்க சொந்த ஊர் செல்லவில்லை என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோல, கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதால் நேற்று வாக்களிக்கவில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியிருப்பது மக்களிடையே பேசு பொருளாகி இருக்கிறது.