• Fri. Oct 11th, 2024

லெட்டர்பேடு சங்கங்கள் தயாரிப்பாளருக்கு தடை விதிக்க முடியுமா?

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ஒரே நாளில் இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி 2அன்றுதியேட்டர்களில் வெளியானது மைக்கேல் படம்

வணிகரீதியாக மைக்கேல்படம் வெற்றிபெறாத நிலையில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட அடிப்படையில்பிப்ரவரி 24ம் தேதி ஓடிடியில் வெளியானது இதற்கு தற்போது தமிழ்நாடுதிரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக, படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியிட வேண்டும் என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஓடிடிக்கும் இடையில் இருக்கும் சமீபத்திய ஒப்பந்தம்.இதன்படியே, படங்கள் வெளியாகி குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் வெளியாகி வருகிறது.இந்த ஒப்பந்தத்தை மீறி படம் வெளியானமூன்று வாரங்களிலேயே அதாவது பிப்ரவரி 24ம் தேதியே ‘மைக்கேல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருப்பதே இப்போது திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு காரணம் என திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்தபோது திரைப்படங்களை அவுட்ரேட் முறையில் பணம் கொடுத்து வாங்குபவர்கள் இது சம்பந்தமாக பேசினால் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

இன்றைய சினிமா வியாபாரத்தில் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிகமான வருவாய் ஒரேபேமெண்டாக கிடைப்பது ஓடிடி, மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் மூலம் தான் அந்த வியாபாரத்தை முடித்த பின்னரே படத்தின் வெளியீட்டு தேதியை தீர்மானிக்கின்றோம் மேலும் ஓடிடி நிறுவனங்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் படங்களை வெளியிடுவது சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் இல்லை.நாங்களும் சங்கம் வைத்திருக்கிறோம் என்பதற்காக அவ்வப்போது இது போன்று அறிக்கைகளை கொடுப்பதையும், பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவது இவர்களது வழக்கம் என்பதுடன் இவர்கள் எடுக்கும் முடிவை அவர்களே கடைப்பிடிப்பதில்லை என்பதே கடந்த கால வரலாறு.கார்த்தி நடிப்பில் வெளியான கைதி 21 நாட்களில் ஓடிடியில் வெளியானது அப்போது அப்படத்தை தயாரித்த டீரீம் வாரியார் நிறுவனத்திற்கு எதிராக முடிவு எடுத்தார்கள் ஆனால் அந்த முடிவை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்காமல் அந்நிறுவன தயாரிப்பில் வெளியான படங்களை இன்றுவரை வெளியிட்டு வருகின்றனர்.கடந்த வருடம் டிசம்பர்22 அன்று திரையரங்குகளில் வெளியான விஷால் நடித்த லத்தி திரைப்படம் நான்கு வாரங்கள் முடிவதற்குள்ளாகவே 2023 ஜனவரி 15 அன்று ஓடிடியில் திரையிடப்பட்டது.இதைப்பற்றி இதுவரை இந்த சங்கம் எதுவும் கூறவில்லை காரணம் படத்தை தமிழகத்தில் வெளியிட்டது ஆளுங்கட்சி நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்பதால் என்கின்றனர்.முதலீடுசெய்துதயாரிப்பவர்கள் படத்தை எப்போது எதில் வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் இது போன்ற லெட்டர் பேடு சங்கங்கள் அல்ல என்றனர் திரைப்பட தயாரிப்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *