கேரளாவில் ஒரே நேரத்தில் ஒரு நாடாளுமன்றம் இரண்டு சட்டசபைகளுக்கு இடை தேர்தல் நடைபெறும்.
வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜூனாமா செய்ததால் நடைபெறும் இடைத்தேர்தல் போன்றே, பாலக்காடு மற்றும் சேலக்கர சட்டமன்ற தொகுதிகளில் உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர் சிபி பெரம்பில் வடகர நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கான இடைத்தேர்தலில் தற்போது பாலக்காடு சட்டமன்றத்தில் மும்முனை போட்டி நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இராகுல் மாங் கூட்டனும், இடது முன்னணி கூட்டணியின் ஆதரவோடு சுயேட்சை வேட்பாளர் டாக்டர்.ஸரின் போட்டி இடுகிறார் ( இவர் காங்கிரஸ் கட்சியின் ஐடி பொறுப்பில் இருந்தவர்) காங்கிரஸ் கட்சியின் டிக்கெட் கிடைக்காததால் அதிகார பூர்வ காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கிருஷ்ணகுமார், பாஜகவின் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.
சேலக்கர சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநிலத்தில் அமைச்சராகவும் இருந்த ராதாகிருஷ்ணன், ஆலந்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில, இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரம்யா ஹரிதாஸ் போட்டி இடும் நிலையில், இடது பட்ச கூட்டணி சார்பில் பிரதீப் போட்டி இடும் நிலையில், கேரளாவில் தேர்தல் கனல் கண்டு கொண்டு இருக்கும் நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்காகாந்தி காங்கிரஸ் சார்பில் திரட்டும் ஆதரவின் எதிரொலி. பாலக்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இராகுல்மாங்கிற்கும், சேலக்கர சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ரம்யஹரிதாஸ், என்ற இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கூடுதல் விளம்பர ஆதரவு வெளிச்சத்தை தந்துள்ளது.
ராகுல்காந்தி இன்றைய பிரச்சாரம்(நவம்பர்_4)பொது கூட்டத்தில் தனியாக தங்கை பிரியங்கா காந்திக்கு ஆதரவு திரட்டிய பேச்சை இப்படி பேசினார்.
இந்தியாவின் நாடாளுமன்றம் நடக்கும் காலங்களில் எல்லாம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களவை தொகுதிகளில் இருந்து நாடாளுமன்ற அவைக்குள், ஒரு மக்களவை பிரதிநிதி செல்லும் வேளையில் வயநாடு தொகுதிக்கு மட்டுமே இரண்டு பிரதிகள் பங்கேற்போம் என கூடியிருந்த மக்கள் மத்தியில் ராகுல் காந்தி தெரிவித்தும், மிகுந்த ஓசையுடன் எழுந்த கை ஒலி அமைதி அடைய நீண்ட நேரம் ஆனது.
வயநாடு மக்களிடத்தில் எனக்கு ஏற்பட்ட இந்த பந்தத்தை விட்டு விலகவே முடியாது. வயநாடு மக்கள் என் மீது வைத்திருக்கும் உன்னதமான பாசம் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற உரிமையை கடந்து, ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக என்னை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இரண்டு முறை வயநாடு மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட்ட போது. எதிர் கட்சிகள் அரசியல் ரீதியாக எனக்கு எதிராக வைத்த வாதங்களை எல்லாம் புறம் தள்ளி என்னை அவர்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.
காங்கிரஸ் கட்சி இந்தியர்கள் அனைவரையும் ஒரே குடும்பம் போல் நேசிகிறது. மதத்தால்,மொழியால், கலாச்சார வித்தியாசம் இன்றி இந்தியாவை நேசிக்கும் இயக்கம் காங்கிரஸ் என்று தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் தினங்களே இருக்கும் நிலையில். பிரியங்கா காந்தியை வரவேற்க, அவரை பார்க்க, கை குலுக்க கூடும் மக்கள் கூட்டம் சொல்லாமல் சொல்லும், பிரியங்கா காந்தி 5 முதல் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லுவார் என்பதை கடந்து, வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் காணும் வெற்றி பாலக்காடு,சேலகர இடைத்தேர்தலிலும் எதிரொலித்தது. 2026_ சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு கட்டியம் கூறும் திருப்பு முனையாக என்பதே, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கிறது.