• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சின்னாளப்பட்டியில் பூத்துக்குலுங்கும் பட்டன் ரோஸ்கள்..!

Byவிஷா

Apr 5, 2023

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் பட்டன் ரோஸ்கள் பூத்துக் குலுங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சின்னாளப்பட்டியை அடுத்த, சிறுமலை அடிவார பகுதிகளான செட்டியபட்டி, ஏ. வெள்ளோடு பகுதிகளில் அதிகளவில் பூத்துக் குலுங்கும் பட்டன் ரோஸ்கள், திருவிழா கால விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த, சிறுமலை அடிவார பகுதிகளான வெள்ளோடு, செட்டியபட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, முருகன்பட்டி பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில வருடங்களாக குறுகிய பரப்பில் அதிக மகசூல் தரக்கூடிய ஒட்டுரக பட்டன் ரோஸ் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில், கடந்த ஓராண்டாக பெய்து வந்த நல்ல மழை காரணமாக, செழித்து வளர்ந்த ரோஸ் செடிகள், கோடை மழை மற்றும் வெயில் பாசன நீர் பாய்ச்சல் என, அனைத்து விதமான சீதோசன நிலையால் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் பூத்துக் குலுங்குகிறது.
மேலும், தற்போது பங்குனி, சித்திரை, வைகாசி என, மூன்று மாதமும் திருவிழா காலம் மற்றும் விஷேச நாட்கள் அதிகமிருப்பதாலும், வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து வாங்கி செல்வதாலும் தற்போது, விலையும் 100 முதல் 200 வரை செல்வதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.