• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை..!

BySeenu

Jul 20, 2026

கோவை, அன்னூர் அடுத்த கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் அமைந்து உள்ள பசுமையான விவசாயத் தோட்டம் ஒன்றிற்குள், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலா வந்து சென்று உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அன்னூர் வட்டார மக்களையும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி உள்ள காடுகளில் இருந்து, உணவு மற்றும் தண்ணீரைக் தேடி ஊருக்குள் புகும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், தற்பொழுது அடர்ந்த குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் நிறைந்த அன்னூர் கோவில்பாளையம் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​நேற்று நள்ளிரவு நேரத்தில், கௌசிகா நதிக்கு மிக அருகில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்து வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமராவில், நைஸாக உள்ளே புகும் அந்த சிறுத்தை, சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி இரை தேடி உலா வரும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகி உள்ளன.

காலையில் தோட்டத்திற்குச் சென்று சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த விவசாயி, இந்த நடமாட்டத்தைக் கண்டு உறைந்து போய் உடனடியாகக் கோவில்பாளையம் நள்ளிரவில் தோட்டத்தில் கட்டப்பட்டு உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடும் நோக்கில் இந்தச் சிறுத்தை ஊருக்குள் ஊடுருவி இருக்கலாம் எனவும், மனித உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிடும் முன்பு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.