• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தொழில் அதிபர் மர்மச் சாவில் திருப்பம். காரில் அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொலை செய்த கும்பல் கைது!..

By

Aug 21, 2021

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார் (41). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் கண்மாயில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய சந்தனக்குமாரின் மனைவி கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தனக்குமாரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் இறந்து போன சந்தனக்குமாரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவருடன் கடைசியாக போனில் பேசிய சிவகாசி மற்றும் நேரு காலனியை சேர்ந்த சோனைக்குமார் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் செந்தில்குமார் (27), நேரு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (21), அசோக்குமார் (20), பழனிகுமார் (30), குரு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் (20) ஆகிய 6 பேரும் சேர்ந்து, சந்தனக்குமாரை காரில் ஏற்றிச் சென்று கொலை செய்தது அம்பலமானது.

இவர்களை விசாரித்ததில் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்குமாரிடம், செந்தில்குமார் வேலை பார்த்து வந்ததாகவும், பின்னர் அவரிடமிருந்து வெளியேறி வேறு இடத்தில் வேலை பார்த்து வருவதாகவும், இதனால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்ட நிலையில், சந்தனக்குமாருக்கு சில பெண்களிடம் தொடர்பு இருந்ததாகவும், இதனை செந்தில்குமார் கண்டித்ததாகவும் இதனால் மேலும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

சந்தனக்குமாரை மிரட்டுவதற்காக 6 பேரும் சேர்ந்து, அவரை காரில் ஏற்றிச் சென்று மிரட்டியதாகவும், சந்தனக்குமார் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததால், காருக்குள்ளேயே வைத்து, அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை ஈஞ்சார் கண்மாய் பகுதியில் வீசிச் சென்றுள்ளதாக வாக்குமூலம் அளித்தனர்.