• Sun. Feb 9th, 2025

வருவாய் துறையினைரை எம்எல்ஏ கண்டித்துப் பேசியதால் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பு!…

By

Aug 21, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் புதிய குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் வேணு சேகரன், தாசில்தார் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் முதியோர் உதவித் தொகையாக 100 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 20 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பேசும்போது ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் வருவாய்த்துறை சார்பில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் காலதாமம் மற்றும் பாரபட்சம் ஏற்படுவதாக தினந்தோறும் தனக்கு புகார் வருவதாக தெரிவித்தார்.

உடனடியாக தகுதியுள்ள நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழக நிதியமைச்சர் குறிப்பாக முதியோர் உதவித்தொகை கேட்கும் அனைத்து நபர்களுக்கும், தகுதியுள்ள நிலையில் உடனடியாக வழங்க சரியான நடவடிக்கைகளை வருவாய்த்துறையினர் மேற்கொள்ளவில்லை என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளார். அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் நிர்வாகம் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டித்து கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், முன்னாள் சேர்மன் ராமசாமி ,கூட்டுறவு சங்க தலைவர் முத்து வெங்கட்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.