• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பயணிகளை தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..,

ByKalamegam Viswanathan

Aug 30, 2026

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்து( சிவராம்) TN65BT3786 மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து நான்கு 40க்கு புறப்பட இருந்தது.

அதற்கு முன்பாக காரியாபட்டி செல்வதற்காக குடும்பத்துடன் சுந்தர் என்கின்ற பயணி குடும்பத்துடன் காரியாபட்டி செல்ல வேண்டும் ஏறி கொள்ளலாமா எனக் கேட்டுள்ளார். அதற்கு முதலில் ஏற்றுக்கொள்ளலாம் என சொல்லி முதலையே அமர வைத்துள்ளார்கள். பின்னர் அருப்புக்கோட்டை அதிக அளவு டிக்கெட் வந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அனைவரையும் கீழே இறங்கச் சொல்லி நாயை விரட்டுவது போல விரட்டி உள்ளார்கள்.

மேலும் தகாத வார்த்தையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது குறித்து மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களும் மற்றும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. ஏறிய பகுதி பயணிகளை கீழே கட்டாயப்படுத்தி இறக்கி மேலும் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுவது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.