• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சந்தியா மண்டபம் புனரமைப்பு பணிகள் சிறப்பு யாக பூஜை..,

ByK Kaliraj

Aug 30, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோர பகுதியில் சந்தியா மண்டபம் உள்ளது. பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டது.

வைப்பாறு மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி வருகிறது சந்தியா மண்டபம் அருகே வரும் போது வைப்பாறு வடக்கு திசையில் செல்கிறது. இது போன்ற அமைப்பு காசி மற்றும் ராமேஸ்வரத்தில் இருப்பதால் முன்னோர்கள் திதி கொடுப்பதற்காக இப்பகுதியில் புயல் மற்றும் வெள்ளத்தில் சேதம் அடையாத வகையில் எட்டு கோணம் அடிப்படையில் மண்டபம் கட்டி பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் பராமரிப்பு பணி நடை பெறாததால் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் மண்டபம் சேதமடைந்தது. இதனால் மண்டபத்தை பயன்படுத்துவது நாளடைவில் குறைந்தது. மண்டபத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான புனரமைப்பு பணிகள் சிறப்பு யாக பூஜை வழிபாட்டுடன் தொடங்கியது ஏராளமானோர் கலந்து கொண்டனர்.