

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக பாஜகவினர் பல ஏற்பாடுகளைஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.பி பதில் அறிக்கையை அடிப்படியாக கொண்டு அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
