

துபாயில் நிலா வடிவில் சொகுசு ஹோட்டல் ஒன்று அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
துபாய் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் நிலவில் தரையிறங்கினால் எப்படி இருக்குேமோ அதே போன்ற உணர்வை தரக் கூடிய சொகுசு விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 224 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ள இந்த சொகுசு விடுதி 5 மில்லியன் அமெரிக்க டாலரில் கட்டப்பட உள்ளதாகவும் இதில் இரவு விடுதி உள்பட பல்வேறு வசதிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 10 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நிலவு விடுதியில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்றும் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் வரை இங்கு வந்து செல்வார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
