


தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதைத் தடர்ந்து இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கு இடையே பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் 3 பணிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்
தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் நெல்லை, தென்காசி, கன்னியாகும, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
இதற்கு இடையே ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படையினர்,
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசார் மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த போது நேற்று கைது செய்தனர்.
அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள நீதிபதியின் வீட்டில் ஜான் ஜெபராஜ் ஆஜர்படுத்தப்பட்டு அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க காவல் துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

