தனது முதல் மனைவியான பொம்மை உடைந்து போய்விட்டதால் இரண்டாவது பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார் கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ.
வித்தியாசமாக திருமணம் செய்ததால் உலக அளவில் பேசப்பட்ட கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இந்த திருமணம் தொடர்பான செய்தியும் வைரலாகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் மனைவியின் இறப்புக்குப் பிறகு, இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். முதல் மனைவி மார்கோவைப்ப் போலவே, இரண்டாவது மனைவி லூனா பொம்மை தான் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பல்கேரியாவுக்கு இரண்டாவது மனைவியுடன் வர்த்தக ரீதியாக பயணம் மேற்கொண்டுள்ளேன். இது இரண்டாவது தேனிலவு என்று உணர்கிறேன் என்று பாடிபில்டர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் ஒரு பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு அந்த பொம்மை உடன் அவர் திருமணம் செய்துக் கொண்டார்.
டோலோச்சோ, மார்கோ என்ற தனது முதல் மனைவி, மன்னிக்கவும், பொம்மைக்கு சில மாற்றங்களைச் செய்வதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்தார் என்பதுதான் ஹைலைட். நிஜ மருத்துவர்கள் இந்த பொம்மைக்கு அறுவை சிகிச்சை செய்து பெண்ணைப் போல் மாற்றினார்கள் என்று அவர் சொல்லியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘காதலுக்கு கண் இல்லை’ என்பதற்கு நிதர்சன உதாரணமாக இருப்பவர் கஜகஸ்தானின் யூரி டோலோச்ச்கோ.