ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி வருகிறது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்வே மேம்பால பணிகள், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலை பணிகள் பல்வேறு பணிகள் என்பது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் .அது மட்டுமல்லாது பல்வேறு பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்கள் என்பது மூடப்படாததன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் என்பதும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு சாலைகளில் குடிநீர் குழாய் என்பது உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வருவது தொடர்கதையாக வருகிறது.
இந்த நிலையில் தான் இன்று காலை ராஜபாளையம் to சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் கீழே குடிநீர் குழாய் உடைந்து தற்போது நீர் சுமார் 15 அடி உயரத்திற்கு வேகமாக பீய்ச்சு அடித்து வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் உடனே தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டும் அல்லா நீர் வீணாகி வருவதை உடனே தடுத்து அதை சரி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.