• Sun. Feb 9th, 2025

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை!

By

Sep 4, 2021 ,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ராம்நகர் பாரதி தெருவை சேர்ந்த தம்பதியினர் துரைராஜ் அவரது மனைவி பத்மா.தேவகோட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் துரைராஜ் தனது மனைவியுடன் தேவகோட்டையில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை வெளியூரில் இருந்து வீடு திரும்பிய முத்துக்குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வீட்டின் பீரோவில் இருந்த 25 சவரன் நகை மற்றும் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பள்ளத்தூர் காவல் நிலையத்தில் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.