• Mon. Jun 5th, 2023

மதுரை அருகே ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற்கோவிலில் குடமுழுக்கு விழா

ByKalamegam Viswanathan

May 17, 2023

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற்கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூர் – ல் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற் கோவிலில் இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.


முன்னதாக அங்கு , யாகசாலையில் பூஜைகள் நடத்தப்பட்டு, திருப்பதி தேவஸ்தான வேத விற்பன்னர்கள் கலந்துகொண்டு, பூஜிக்கப்பட்ட கலச, தீர்த்தங்களை எடுத்துக்கொண்டு கோபுரத்தின் மேல் உள்ள கலசங்களில் சம்ப்ரோஜனம் செய்து குடமுழுக்கு விழா நடத்தினர். இவ்விழாவில் திருவண்ணாமலையில் இருந்து முக்கிய சிவாச்சாரியர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு விழா நடைபெறும் போது, கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்களை பக்தர்கள் எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து, கோவிலில் விழா கமிட்டி சார்பாக, விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *