



மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி நெருஞ்சி
பட்டியை சேர்ந்தவர் சந்தன கருப்பு (வயது 30) இவரது மனைவி கிருஷ் ணவேணி 27 இவர்களுக்கு கேசவ ன் (4) ரோஷன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர் கணவன் மனைவி இரு வரும் கட்டிட தொழிலாளர்கள். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போ து அந்த பகுதியில் உள்ள சின்டெக் ஸ் தொட்டி கழிவு நீர் பள்ள குழியில் தவறி விழுந்தனர்.

தகவல் அறிந்த உறவினர்கள் கேசவன் ரோஷன் இருவரையும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இதில்கேசவன் பரிதாபமாக உயிரிழந்தான் உயிரு க்கு ஆபத்தான நிலையில் ரோஷ ன் மதுரை அரசுமருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச் சை அளிக்கப்பட்டு வருகிறது.


