
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான அரியூர் கட்டப்புலி நகர் பொதும்பு அதலை ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மாநில அம்மா பேரவை செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகேந்திரன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா முன்னாள் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலிட பார்வையாளர் தண்டரை மனோகரன் மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை தன்ராஜ் வக்கீல் திருப்பதி மகேந்திர பாண்டி சிவசக்தி புளியங்குளம் ராமகிருஷ்ணன் ரகு பஞ்சவர்ணம் மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி சமயநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதும்பு ராகுல் நன்றி கூறினார்.
