• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

மு.க.ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!!

ByKalamegam Viswanathan

May 20, 2025

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி ஜெயா என்பவர் 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் தனது தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்களாக மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்தப் பெண் உயிரிழந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்க பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணையம் முறையாக விசாரணை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கனவர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த தொகையை மருத்துவர் பிரபாகரன் ரூ.40 லட்சமும், மருத்துவர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி, குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வரவேற்கிறது.

மேலும் அரசு மருத்துவ மனைகளுக்கு இலவச சிகிச்சை பெற வரும் ஏழை மற்றும் நடுத்த மக்கள் தான் அதிக அளவில் அரசு மருத்துவ மனைகளுக்கு வருகின்றனர். எல்லா விதமான நோயாளிகள் பூரணமாக குனமடையும் வகையில் மருந்து – மாத்திரைகள் மற்றும் கருவிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. ஆனால் ஒரு சில அரசு மருத்துவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு மருத்துவ மனைக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற வரும் நோயாளிகளை தனது தனியார் மருத்துவ மனைகள் மற்றும் கிளினீக்களில் வர சொல்லி மருத்துவ சிகிச்சை அளித்து ஏழை மக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனர். இது போன்று ஒரு சில அரசு மருத்துவர்கள் செய்யும் காரியத்தால் தமிழகத்தில் நல்லாட்சி செய்யும் ஆளும் அரசுக்கு பொது மக்கள் மத்தியில் கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.

எனவே : ஜெயா என்கிற பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான பிரபாகரனை அரசு மருத்துவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் . மேலும் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றுவதை கண்கானித்து அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் தனியார் மருத்துவனைகள் மற்றும் கிளினீக்களின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் தனது தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினீக்கள் வைத்திருக்கும் அரசு மருத்துவர்களை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் இந்த விசயத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும் . ஆகவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.