• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்

Byமதி

Nov 18, 2021

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரேசிலில் முன்கள பணியாளர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தி கொள்ளலாம் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டு, சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான பிரேசிலியர்கள் பூஸ்டர் ‘டோஸ்’ பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது. உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.