லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 194 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன் 82-வது இடத்தை பிடித்து உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா சிறப்பான நிலையில் உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் வடகொரியா, துர்க்மெனிஸ்தான், வெனிசூலா மற்றும் எரித்ரியா போன்ற நாடுகள் அதிக லஞ்ச ஆபத்து நிறைந்த நாடுகளாகவும், டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன், நியூசிலாந்து போன்ற நாடுகள் லஞ்ச ஆபத்து குறைந்த நாடுகளாகவும் அறியப்படுகின்றன.