

சிவகங்கை மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 4வது புத்தக திருவிழா இன்று சிவகங்கை மன்னர் பள்ளி மைதானத்தில் துவங்கியது மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோ பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து 10 நாள்கள் நடத்தும் புத்தகத் திருவிழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்.21 இன்று துவங்கி மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மொத்தம் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு 91 அரங்குகளில் இன்று விற்பனை துவங்கியது.
இப்புத்தகத் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களின் பல்வேறு தலைப்புகளிலுமான இலட்சக்கணக்கிலான புத்தகங்கள், நாள்தோறும் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், சிந்தனை பட்டிமன்றங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது . அத்துடன், குழந்தைகளுக்கான திரைப்பட அரங்கு.கோளரங்கம் அறிவியல் கண்காட்சிகள். கல்லூரி மாணவர்களுக்கு. வேலை வாய்ப்பினை வழங்கும் போட்டித்தேர்வுகளுக்கான நிகழ்ச்சிகள், அரசு அலுவலர்களுக்கிடையேயான பல்வேறு போட்டிகள்,பெருந்துறை வாசிப்பு, போன்றவையும் இடம் பெறுகிறது.

புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்றைய புத்தகத் திருவிழா துவங்கியது முதல் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்று புத்தகங்கள் வாங்கினர். அதேபோல் புத்தகத் திருவிழா அரங்கு முகப்பில் அய்யன் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு நின்று பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுப்பதும் செல்பி எடுப்பதில் ஆர்வம் கட்டினர். குழந்தைகளிடம் வாசிக்கும் திறன் விருப்பம் அதிகரித்துள்ளதும், திருக்குறள் தொடர்பான புத்தகங்கள் ஆர்வம் அதிகம் உள்ளது. திருவள்ளுவர் குறித்த விழிப்புணர்வு இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது.சிவகங்கையின் மண் சார்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளது. புத்தக வாசிப்பாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்று புத்தகத் திருவிழா நடைபெறுவது சிவகங்கை போன்ற பின்தங்கிய பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


