• Thu. Dec 12th, 2024

சசிக்குமாரை பாராட்டிய பாலிவுட் பிரபலம்!

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம். இப்படத்தில் ஜெய், சுவாதி, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்..

இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இப்படம் தன்னைக் கவர்ந்துள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் சுப்பிரமணியபுரம் எனப் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சசிக்குமார் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசினார். நீண்ட நாள் கழித்து அவரைச் சந்திப்பதாகவும் சசிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.