• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

புஷ்பா’-வின் அடுத்த சாதனை!

அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் தாதாசாஹேப் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் பின்னர் ஓடிடியிலும் வெளியானது. இந்நிலையில் தற்போது நடந்த தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா திரைப்படம் வென்றுள்ளது.