நம்மை சுற்றியுள்ள வானில் பல்வேறு அற்புதங்கள் தினந்தோறும் நிகழ்ந்துவருகிறது. அந்தவகையில் நாளை பிளட் மூன் சந்திரகிரணம் நடைபெறுகிறது.
சந்திரகிரணம் என்பது உலகமுழுவதும் ஆண்டுக்கு பல முறை நிகழக்கூடியது தான்.அதில் பிளட்மூன் சந்திரகிரகணம் ஆபூர்மான ஒரு நிகழ்வாகும்.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு சரியான கோட்டில் வரும்போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அந்த வகையில், 2022-ஆம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ இருக்கி றது. இதில், முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து இந்தாண்டின் முதல் சந்திர கிரகணமானது மே 15, 16 தேதிகளில் நடக் கிறது. இந்த சந்திர கிரகணத்தை ‘பிளட் மூன்’ என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ள னர். சூரிய ஒளி பின்புறத்தில் ஒளிரும் சம யங்களில் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி யளிப்பதே ‘பிளட் மூன்’ என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்திய நேரப் படி மே 16 காலை 7:02 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணி வரை நிகழும் இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.