• Thu. Feb 13th, 2025

நிதிஷின் அதிருப்தியால் பின்னடைவை சந்திக்கும் பாஜக

ByA.Tamilselvan

Aug 9, 2022

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) – பாஜக கூட்டணி முறிந்தது.இதனால் அங்கு நிதிஷின் அதிருப்தியால் பின்னடைவை சந்தித்துள்ளது பாஜக.
அகண்ட பாரதக்கனவுடன் மாநில கட்சிகளை வலுவிழக்கச்செய்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது பீகாரில் தனக்கான முடிவை தானே தேடிக்கொண்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் லாலு மகன்களின் செயல்பாட்டால் அதிருப்தியில் இருந்த நிதிஷை வளைத்து ஆட்சியைப் பிடித்த பாஜக அதே நிதிஷின் அதிருப்தியால் பின்னடைவை சந்தித்துள்ளது.