

பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை.
சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பாதகமாக வந்தால் கட்சியை கைப்பற்றும் நடவடிக்கை ,சசிகலாவுடன் கூட்டணி அமைப்பது மற்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து முக்கிய முடிவு இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

