அதிமுகவை பிளவு படுத்தி வலுவிழக்கச் செய்ய, தமிழகத்தில் பொம்மலாட்ட விளையாட்டை பாஜக நடத்துகிறது” என கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட இருப்பதை அறிந்து, முற்போக்காளர் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒரே இலக்கோடு ஆர்.எஸ்.எஸ்.சை ஒரு போதும் காலூன்ற விடமாட்டோம் என்பதை கங்கணம் கட்டிய உறுதியாக்கிக் களம் காணத் தவறக்கூடாது.
தமிழ்நாட்டு எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை நான்கு பிளவாக்கி, நான்கையும் வலுவிழக்கச் செய்ய கோர்ட்டில் காலந்தள்ளிடும் நிலைக்கு ஆளாக்கி, ‘பொம்மலாட்ட விளையாட்டை’ – அதனை இயக்கிடும் கயிறுகளை பாஜக – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கைகளில் வைத்திருக்கின்றன.திமுகவும், திராவிட மாடல் ஆட்சியும் தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகளுக்கு குறியாம். அதில் அவர்கள் ஓய்வதாக இல்லையாம். நாமும் அந்த மதவெறி நோய் விஷக்கிருமிகளை விடுவதாக இல்லை.
தமிழ் மண்ணை, இந்தியத் திருநாட்டை, மதச்சார்பற்ற சமூக நீதி, சமதர்மத்தை காப்பாற்ற சரித்திரம் படைக்கும் தருணம் இது” என்று அவர் கூறியுள்ளார்.!
அதிமுகவை வலுவிழக்கச் செய்ய பொம்மலாட்டம் நடத்துகிறது பாஜக-வீரமணி
