• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு..!

Byவிஷா

Oct 3, 2023

டெல்லியில் இன்று நடைபெறவிருந்த பா.ஜ.க மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பா.ஜ.க உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக, அதிமுக தலைமை சமீபத்தில் அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படும் நிலையில், டெல்லிக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை, அண்ணாமலை சந்தித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று இரவு 8 மணியளவில் முதலில் நட்டாவை சந்தித்த அவர், இரவு 10.30 மணியளவில் அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அதிமுக – பாஜக இடையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.