• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரியில் தி.மு.க அரசைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை வாரந்தோறும் மூன்று நாட்கள் தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு இன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆலயங்களில் வழிபாட்டு உரிமையை தடுப்பது எங்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதற்கு சமம் என குற்றஞ்சாட்டினார்.


கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பாக மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜகவினர் இந்துக்களுடைய புனித நாளான வெள்ளிக்கிழமை மற்றும் அதனை தொடர்ந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகிய வாரத்தில் மூன்று நாட்கள் ஆலயங்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கொரோனாவை காரணம் காட்டி தவறாக திமுக பிரச்சாரம் செய்து வருவதாகவும், இந்துக்களின் அனைத்து விழாக்களும் தடுக்கப்பட்டு வருவதாகவும், ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி என அனைத்து இந்துக்களுடைய விழாக்களும் தடுக்கப்பட்டு வருவதாகவும் இதுபோன்று இந்துக்களின் வழிபாட்டு உரிமையை கபளீகரம் செய்யும் திமுக அரசை கண்டித்து கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆலயங்களில் வழிபாடு செய்யலாம் என்ற உரிமையை தடுக்கப்படுவது எங்களுடைய உரிமையை மறுக்கப்படுவதற்கு சமம். எனவே தமிழக அரசு வாரந்தோறும் வெள்ளி உள்ளிட்ட விடுமுறை மூன்று நாட்கள் ஆலய தரிசனம் தடையை நீக்க வேண்டும் அனைத்து நாட்களிலும் மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
விசுவல்:

  1. நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற மாலை நேர ஆர்ப்பாட்டம்.
  2. பேட்டி: பொன் ராதாகிருஷ்ணன் – ( முன்னாள் மத்திய இணை அமைச்சர் )