மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பி.எம்.கேர் நிதியிலிருந்து 2.50 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அறுவை சிகிச்சை மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு துறைகள் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு தென்மாவட்டங்கள் மற்றும் உள்ளளுர் மக்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
கொரானா காலகட்டத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு சார்பில் கொரானா சிறப்பு மருத்துவமனையில் நான்கு ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ந்து நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்ஜிசன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பி.எம்.கேர் நிதியிலிருந்து 2.50 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கொள்கலன் மூலம் ஆயிரம் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த முடியும். இந்த ஆக்சிஜன் கொள்கலன்களை மதுரை எம்பி வெங்கடேசன் திறந்து வைத்தார் உடன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆகியோர் இருந்தனர்.