


மதுரையில்பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இராணுவத்தினர்பிரிவு சார்பில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ, துணை ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் தி.மு.க குண்டர்களிடம் இருந்தும், சமூக விரோதிகளிடமிருந்தும் உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரையில்பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இராணுவத்தினர்பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ராணுவ பிரிவு மாநிலத் துணைத் தலைவர் மாணிக்கம்நடராஜன் தலைமையிலும் மாநிலச் செயலாளர் ஆனந்தஜெயம், மதுரை நகர தலைவர் ராஜபாண்டியன் மதுரை கிழக்கு மேற்கு மாவட்ட தலைவர்கள் ஆண்டி , தியாகராஜா மற்றும் அசோக் குமார் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக தமிழக அரசு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க கோரியும்ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோசங்களை எழுப்பினர்இந்த ஆர்ப்பாட்டத்தில்ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பாரதிய ஜனதா கட்சியின் ராணுவபிரிவுமுன்னாள் மாநிலத் துணைத் தலைவர் மாணிக்கம்நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தில் எம்ஜியார் நகர் பிரபு மற்றும் அவருடைய சகோதரர் பிரபாகர் (Army) இருவரும் தனது குடும்பத்தினருடன் விடுமுறை கழிக்க சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அதே கிராமத்தைச்சேர்ந்த தி.மு.க கவுன்சிலர்க்கும், மேற்கொண்டு இராணுவ வீரர் குடும்பத்தாருக்கும் வாய்த்தகராறு முற்றியதால் அன்று இரவு தி.மு.க கவுன்சிலர் சின்னசாமியும் அவரது குண்டர்படையும் சேர்ந்து, மேற்கொண்ட இராணுவவீரர் அவரது குடும்பத்தினரையும், கொடுர ஆயங்களைக்கொண்டு தாக்கியதில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நமது இராணுவவீரர் .பிரபு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதைக்கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இராணுவத்தினர்பிரிவு சார்பாக வர்மையாக கண்டிக்கிறோம். மேலும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்று இராணுவ வீரர்களுக்கும். அவர்களது தி.மு.கவின் குண்டர்களிடமிருந்தும். காப்பாற்றும்படி மாவட்ட ஆட்சியாளரை கேட்டுக்கொள்கிறோம். எனக் கூறினார்


