• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடிக்கு பா.ஜ.க எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு..!

Byவிஷா

Dec 5, 2023

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு பா.ஜ.க எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (டிச.,4) துவங்கி, வரும் 22 வரை நடக்கிறது. முன்னதாக கூட்டத்தொடரில் பங்கேற்க லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து கூறி, பா.ஜ., உறுப்பினர்கள், “மூன்றாவது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும் மோடி அரசு” என்று கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை பிரதமர் மோடி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது.,
4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கும், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது. இப்படியான சிறப்பான மக்களின் தீர்ப்புக்கு பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தை சந்திக்கிறோம். கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) நாட்டுக்கு நேர்மறையான செய்தியை வழங்கினால் அது உங்களுக்கு நன்மை பயக்கும். எதிர்மறையையும், வெறுப்பையும் வெளிப்படுத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.