• Fri. Mar 29th, 2024

பாஜக பிரமுகர் கல்யாணராமனை வறுத்தெடுத்த நீதிமன்றம் ..

தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாக கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் தேதி பாஜக பிரமுகர் கல்யாணராமனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்திருந்தார.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏற்கனவே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வெறுப்புணர்வோடு பேசமாட்டேன் என்று மனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் அதேபோன்று பேசுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அவர் மதிப்பதில்லை என்றும் இவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத மோதலை உருவாக்கும் விதமாக பேசுவதால் அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது சரிதான் என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மனுதாரர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார், காவல்துறையை மதிக்க மாட்டார், சட்டத்தை மதிக்க மாட்டார் என்றும் அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், மனுவுக்கு நான்கு வாரத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *