மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பிரச்சாரம் தொடங்கியது.
முன்னதாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வேட்பாளர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக 100 வார்டுகளிலும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரையில் இன்றுமுதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம்.
100 வார்டுகளில் வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது பல்வேறு கட்சிகளில் உள்ளவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர்.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் பகுதி வேட்பாளர்கள் உடனிருந்தனர்.