அண்ணாநகரில் உள்ள வீட்டை, ‘சட்டவிரோத’ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக, அதிமுக முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா மீது அவரது 2 வது கணவர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ-யின் மேல்முறையீட்டுக் குழுவின் தலைமை அதிகாரியாகவும், டெல்லியின் லோக்-அதாலத் நீதிமன்றத்தின் இணை உறுப்பினராகவும் ராமசாமி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலையில் அண்ணாநகர் மேற்கில் உள்ள தங்களது வீட்டிற்கு மகளுடன் சென்றிருந்தேன். அப்போது, வீட்டில் ஒரு பெண் உட்பட அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் இருப்பதை கவனித்தேன்.
இதுதொடர்பாக மனைவி புஷ்பாவிடம் விசாரித்தேன். ஆனால், அவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றால், மேலும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்.
எங்களது வீட்டை விபாச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டிய ராமசாமி, சசிகலா புஷ்பா மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா, தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா ஆகிய இருவர் கொலை செய்வதாக மிரட்டினார்கள் என புகாரளித்தார்.
அவரது புகாரின் பேரில், ஜே.ஜே.நகர் காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை குடும்பநல நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி சசிகலா புஷ்பா (45) கடந்த 2018ஆம் ஆண்டு ராமசாமியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.