• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நெட்டீசன்களின் நக்கல் தர்பாரில் காங்கிரஸ்

சென்னை மாநகராட்சி தேர்தலில், பலமான பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

16 வார்டுகளும் சராசரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 சீட் வீதமாக ஒதுக்கப்பட்ட நிலையில், மாவட்ட தலைவர்களே அதில் ஒன்றை தனக்காக எடுத்துள்ளது தான் நெட்டீசன்களின் பேச்சுப்பொருளின் காரணமாய் மாறியுள்ளது.

எந்தவொரு கட்சியிலும் மாவட்ட தலைவர்களின் குறி எம்.எல்.ஏ சீட் ஆக இருக்கும் போது காங்கிரஸில் வேட்பாளர்கள் இல்லாத பஞ்சதினால் தான் மாவட்டங்களே நிற்பதாக நெட்டீசன்கள் நக்கல் அடிக்கின்றனர்.

கரையில்லாத சமூக ஊடக காட்டாற்றில் பழமை வாய்ந்த காங்கிரஸ் மரம் அடித்து செல்கிறது.

அதன்படி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் (வார்டு எண்.6), வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லி பாபு (வார்டு எண்.37), மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் (வார்டு எண்.63), தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. முத்தழகன் (வார்டு எண்.170), தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் (வார்டு எண்.165) ஆகியோர் போட்டியிடுகின்றனர்