• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி கருத்து சேகரிப்பு வாகன சேவை துவக்கம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 3, 2026

நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி “மக்கள் கருத்து
எங்கள் வாக்குறுதி” என்ற முழக்கத்தோடு பாஜக 2026 தேர்தல் வாக்குறுதி கருத்து சேகரிப்பு வாகன சேவை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி பூவம் மாரியம்மன் கோவில் திடலில் மாவட்ட தலைவர் GKK. முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

   இந்த சேவையை மாநில பட்டியலில் அணி பொறுப்பாளர் TKSM. மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் துரை சேனாதிபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VMCV கணபதி, மாநில செயலாளர்

அமுதா ராணி, மாநில மருத்துவரணி அமைப்பாளர் Dr.விக்னேஸ்வரன் கலந்து கொண்டனர் முன்னதாக பூவம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதி கருத்து சேகரிப்பு பெட்டியில் தங்கள் தொகுதியின் மக்கள் பிரச்சனைகளை அப்பகுதி மக்கள் கோரிக்கைகளாக எழுதி தேர்தல் வாக்குறுதி கருத்து சேகரிப்பு பெட்டியில் போட்டு தங்களது கோரிக்கைகளை பாஜகவில் தேர்தல் அறிக்கையில் வர முதற்கட்ட முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சேவை வாகனம் மற்றும் சேவை பெட்டி மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளுக்கும் சென்று அந்தந்த தொகுதிகளின் மக்கள் பிரச்சனைகளை பெற்று பின்னர் தேர்தல் அறிக்கையில் மக்களின் குரல் ஒலிக்கும் என பாஜக மாவட்ட தலைவர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.