நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று அதிகளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை அதிமுக முன்னாள் கவுன்சிலரான லட்சுமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் 61வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காத நிலையில், உடனடியாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மருத்துவர் சரவணனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
பாஜகவில் இணைந்த லட்சுமிக்கு 61வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், பாஜக பெண் வேட்பாளர் லட்சுமி மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்திற்கு எளிய முறையிலும், வித்தியாசமாக சைக்கிள் ரிக்க்ஷாவில் தாமரை மலரை ஏந்திய படி வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
ரிக்ஷாவில் தனது உறவினர் மற்றும் பாஜகவினருடன் கூட்டமாக லட்சுமி வந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.