

அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாளை உண்டியல் திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தகவல்
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுக்கு உள்ளூர், வெளி மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவர். அதே போல கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநில பக்தர்களும் வெளிநாட்டு பக்தர்களும் வருகை தருவது வழக்கம். அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் உண்டியல் அவ்வப்போது திறந்து எண்ணப்படுகிறது.தங்கம் ,வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களும் , வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக கிடைப்பதுண்டு. இந்நிலையில் நாளை காலை 8.30மணிக்கு உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
