

2021 – 2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திவ்விய பிரபந்த பாடசாலை தொடக்க விழா இன்று நடைபெற்றது. தொடக்க விழாவை காணொலிக்காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், ஒன்றிய தலைவர் மல்லி கு.ஆறுமுகம், கோவில் தக்கார் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் பயிற்சி முடித்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை நகர்மன்றத் தலைவர் வழங்கினார்.
