• Fri. Apr 26th, 2024

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க 20மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..!

Byவிஷா

Aug 25, 2022

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான தரிசிக்க 20மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை அடுத்தும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரிஉயர்ந்து கொண்டு காணப்படுகிறது. நேற்று காலை முதல் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்தனர்.
இதனால் வாகன சோதனை நடைபெறும் அலிபிரி சோதனை சாவடியில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனைக்காக சுமார் 1 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்திற்கு வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர். இதையடுத்து பக்தர்கள் கூட்டம் உயர்ந்ததால் வைகுந்தம் காம்ளக்ஸ் 30 அறைகளும் நிரம்பி வழிந்தது. இதனைதொடர்ந்து இலவச தரிசனத்திற்காக மட்டும் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 20 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 74,748 பேர் தரிசனம் செய்தனர். 39,086 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *