• Wed. Dec 11th, 2024

வெள்ளித்திரைக்குள் நுழையும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்…

Byகாயத்ரி

Oct 3, 2022

ஐந்து சீசன்ங்களை கடந்து வெற்றிகரமாக 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் சீசன் 6 உடைய ப்ரோமோக்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் மக்களிடம் ஆதரவை பெற்ற அவர் டைட்டில் ரன்னராகவும் மாறினார். இதற்கிடையே தற்போது பாலாஜி முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதுபற்றி அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுருக்கிறார். படத்தின் பெயர் மார்கெண்டேயனும் மகளிர் கல்லூரியும் என வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தை லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் சார்ப்பில் ரவீந்தரன் தயாரிப்பதாகவும் அறிவித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.