மணிரத்னம் இயக்கத்தில் சரித்திர படைப்பான பொன்னியின் செல்வன் உலகெங்கும் வெளியாகி வெற்றி வாகை சூடிவருகிறது. பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பொன்னியின் சொல்வன் கதை சொல்லும் அளவிற்கு கல்கியின் எழுத்து இருக்க ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.
இப்படம் குறித்த போஸ்டர்களும், மீம்ஸ்களும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் போஸ்டரில் இந்திய வீரர்கள் முகத்தை கிராபிக்ஸ் செய்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஆதித்த கரிகாலனாக ரோகித் சர்மாவும், அருள்மொழியாக விராட் கோலியும், வந்தியத்தேவனாக சூர்யகுமார் யாதவ்வும் உள்ளனர். அதில் “இந்தியன் செல்வன்ஸ்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பொன்னியின் செல்வனை தயாரித்த லைகா நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.