• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற சைக்கிள் பேரணி..,

ByK Kaliraj

Jun 2, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஹயக்ரீவாஸ் சி.பி.எஸ்.சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ஹயக்ரீவாஸ் பள்ளி வளாகத்தில் துவங்கிய சைக்கிள் பேரணி சிவகாசி நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று 15 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து மீண்டும் பள்ளி வளாகத்தையே வந்தடைந்தது. சைக்கிள் பேரணியின் போது போதைப் பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை சைக்கிளில் பொறுத்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.