• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் பாரதி தமிழ்ச் சங்கம் கட்டடம்-1.5 கோடி ரூபாய் நிதியுதவி

Byகாயத்ரி

Dec 13, 2021

அமெரிக்காவின் கொலராடோ மாநில பல்கலை ஒன்றில் பட்டம் பெற்ற அப்பன், கேரளாவில் பிறந்தவர். இவரது மனைவி ராஜம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். பாரதி கவிதையால் ஈர்க்கப்பட்ட அப்பன், தமிழ் மீது கொண்ட பற்றால் அமெரிக்காவில் பாரதி தமிழ்ச் சங்கம் கட்டடம் கட்ட 1.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களால் ஏற்படும் நிலக்கழிவுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்த இவர், பின்னர் சொந்தமாக இயற்கை மூலிகைத் தொழிலை கையில் எடுத்தார். இன்று, அமெரிக்காவில் ஹூஸ்டனின் பிதாமகன் என செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

இவரது மனைவி ராஜம் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். அப்பன் – ராஜம் தம்பதி ஹூஸ்டனில் உள்ள பல்கலையில் தமிழ் இருக்கை அமையவும் பெரும் பங்காற்றியுள்ளனர். வறுமையில் வாடும் பலருக்கு உதவி வரும் இவர்கள் இலவசமாக மருத்துவ உதவியையும் செய்து வருகின்றனர்.

தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் பாரதியின் மறைவு நூற்றாண்டு நிகழ்வை கேள்விப்பட்டு அமெரிக்காவில் மீனாட்சி கோவில் எதிரே உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை 47 ஆண்டுகளாக இயங்கி வரும் பாரதி கலை மன்றத்திற்கு தானமாக கொடுத்துள்ளனர்.வட அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தமிழ்ச் சங்கம் சொந்த கட்டடத்தில் இயங்குவது பெருமையாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து அப்பன் கூறுகையில் ”என் மனைவியே எனக்கு பெரிய உத்வேகமாக இருக்கிறார். தமிழ் கலாச்சாரம், மொழி, பண்பாடு மீது ஆர்வம் ஏற்பட அவரும் முக்கிய காரணம்” என்றார்.