வருகின்ற கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் விருப்பமனு பெற்றுக்கொண்டனர்.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணையின்படி கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம், காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் P.K.வைரமுத்து மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கழக துணைச் செயலாளர் ராஜநாயகம், புதுக்கோட்டை மாவட்ட கழக பொருளாளர் அம்பி விருப்பமனு பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.மேலும் காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இராமமூர்த்திராஜ், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தோப்பூர் K.முருகன்,காரியாபட்டி பேரூர் செயலாளர் வை.விஜயன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

