

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா
நிறைவுற்றது.
குமரியில் பகவதி வழிபாட்டு கோவில்களில் மிக முக்கியமான, கன்னியாகுமரி தேவி பகவதியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலத்துடன் அம்மன் வெள்ளி பல்லாக்கில் வீதிஉலா நடைபெற்றது. இதில் தமிழகம்,கேரளா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா 10_ம் நாள் நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஒடுக்கு பூஜையில், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்,இணை ஆணையர் பழனி,குமார் உட்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.


