• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

ByK Kaliraj

May 2, 2026

சிவகாசியில் நடைபெற்று வரும் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரம்மாண்ட வடிவிலான சிவன், அம்மன் சுவாமிகளின் திருவுருவ பொம்மைகள் தத்துருவமாக தாண்டவமாடிய காட்சிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

சிவகாசியின் காவல் தெய்வம் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரி குழுமங்களின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செண்டை மேளம் முழங்க பெண் பக்தர்கள் விளக்கேந்தி, பாரம்பரிய கட்டைக்கால் ஆட்டம், புலியாட்டாம், காளையாட்டத்துடன் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கைலாச பார்வத வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதியுலா வர அப்போது கேரளாவில் பாரம்பரிய மிக்க வண்ண மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டிருந்த யானை, எழுந்தாடும் நாகக்கன்னி, நரசிம்மர் வதம் செய்தல் அவதாரம்,

நின்ற கோலத்தில் எழுந்தாடும் சிவனின் உடுக்கையுடன் ருத்ர தாண்டவமாடும் காட்சிகள் பிரம்மாண்டமான வாகனங்களில் நான்கு ரத விதிகளில் ஊர்வலமாக நடைபெற்றது. ஊர்வலம் 2 மணி நேரம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.