

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், எரிகள் வேகமாக நிறைந்து வருகிறது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் துரைமுருகன் கேட்டறிந்தார்.
